ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் இன்று (மே.13) காலமானார் என்று எமிரேட்ஸ் செய்தி நிறுவனமான WAM வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார்.
நவம்பர் 2, 2004 வரை அதிபராக பணியாற்றிய அவரது தந்தையான மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948 இல் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்தார்.
இவர் ஷேக் சயீதின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது