நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை விடப்படும் என அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் தனியார் துறை ஊழியர்களும் அதிக நாள் விடுமுறையை அனுபவிக்க இருக்கிறார்கள். முன்னதாக அமீரக அரசுத்துறைப் பணியாளர்களுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை அமீரக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை விடப்படும் என அமீரக அரசு மனிதவள மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
