UAE Tamil Web

அமீரகம்: அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஒரு நாள் பொது விடுமுறை அறிவிப்பு.! என்று விடுமுறை தெரியுமா.?

holiday

நாட்டில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த மாதத்தில் ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்படும் என்று மனிதவள மற்றும் எமிராட்டிசேசன் அமைச்சகம்(Human Resources and Emiratisation) அறிவித்துள்ளது.

- Advertisment -

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் அக்டோபர் 29 வியாழக்கிழமை அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் உத்தியோகபூர்வ விடுமுறை வழங்கப்படுவதாக மனிதவள மற்றும் எமிராட்டிசேசன் அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல இந்த விடுமுறை அறிவிப்பால் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை பெறும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று நாள் கொண்ட வார இறுதி(weekend)கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த வாரம் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளுக்காக ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை ஊழியர்களுக்கு பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.