அமீரகத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக அரசு பொது வழக்குத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 22 அன்று, உள்துறை அமைச்சகம் அமீரகத்தில் ட்ரோன்கள் மற்றும் சாகச விளையாட்டு விமானங்கள் பறப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில் சிலர் அந்த தடை உத்தரவை மீறி செயல்பட்டதாகக தெரியவந்ததை அடுத்து, 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அமீரக அரசு பொது வழக்குத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Flying a drone in violation of the ban issued by competent authorities#law #legal_culture #publicprosecution #safe_society pic.twitter.com/bNd9xU8PS3
— النيابة العامة (@UAE_PP) January 26, 2022
ட்ரோன் கேமராக்கள் மூலம் படப்பிடிப்புகளை நடத்தவிருக்கும் நிறுவனங்களும், விளம்பர நிறவனங்களும் தேவையான அனுமதிகளைப் பெற்றால் மட்டுமே பணிகளை தொடர முடியும். அனுமதியின்றி அமைச்சகத்தில் உத்தரவுகளை புறக்கணிப்பவர்கள் சட்டச் சிக்கல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பவர்கள் சட்டப் பொறுப்புகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.