வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் சைபர் க்ரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அமீரகத்தில் தனிநபர் இணையதளத்தையோ அல்லது நிறுவனங்களுடையதை ஹேக் செய்தாலோ, முறைகேடாக பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக பொதுவழக்குத்துறை எச்சரித்துள்ளது. சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி இணையதளத்தை தவறுதலாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் ஹேக்கர்களுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல அரசு சார்ந்த இணையதளங்களையோ ரகசிய ஆவணங்களையோ ஹேக் செய்தால் சிறைத்தண்டனையுடன் இரண்டரை லட்சம் முதல் ஒன்றரை மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும். 2012ம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் ஆர்டிகில் 5ன் படி சைபர் க்ரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமீரக பொதுவழக்குத்துறை சமூக வலைத்தளங்கள் மூலமாக எச்சரித்துள்ளது
