UAE Tamil Web

அமீரக அரசு சீருடையை பிறர் அணிந்தால் என்ன தண்டனை தெரியுமா? – பொது வழக்குத்துறை வெளியிட்ட எச்சரிக்கை..!

Dubai Police

அமீரக அரசினால் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட சீருடையை தேவையற்று பிறர் பொதுவெளியில் அணிந்திருந்தால் அவருக்கு ஒருவருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ்க்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும் என அமீரக பொதுவழகுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பொதுவழக்குத்துறை வெளியிட்ட சமூக வலைத்தள அறிக்கையில்,” பொதுவெளியில் தேவையற்ற விதமாக அரசால் சட்டப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட சீருடையை அணிபவர்கள், தன்னைவிட மூத்த அதிகாரியின் சீருடையை அணிபவர்கள் அல்லது புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது இராணுவம் அல்லது படிப்பு அல்லது பாராளுமன்றத்தின் பேட்ஜ், பதக்கம், கையெழுத்து அல்லது குறியீடுகளை தவறான நோக்கத்துடன் தேவையில்லாமல் பயன்படுத்துபவர்களுக்கு ஒருவருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ்க்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாடுகளைச் சேர்ந்த பதக்கங்கள் முதலியவற்றைத் தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் மேற்கண்ட சட்டம் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.