அமீரகத்தில் ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு பெண் போலீஸ், கதவுகளுக்குப் பின்னால் மக்கள் இருப்பதைக் கண்டறியும் ஸ்மார்ட் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளார். இது குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆயுதம் ஏந்திய அல்லது ஆபத்தான குற்றவாளிகளைக் கையாளும் போது போலீசாரை கூடுதல் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
பெடரல் நேஷனல் கவுன்சில் அமர்வை ஒட்டி, உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த கண்காட்சியில் ராஸ் அல் கைமா காவல்துறையின் சிறப்புப் பணித் துறையைச் சேர்ந்த முதல் சார்ஜென்ட் அம்னா அல் ஹஜ்ரி தனது ஸ்மார்ட் சாதனத்தைக் காட்சிப்படுத்தினார்.
ரசல் கைமா காவல்துறையின் சிறப்புப் பணித் துறையின் இயக்குநர் கர்னல் டாக்டர் யூசுப் சலேம் பின் யாகூப் அல் ஜாபி, அம்னாவின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டினார். இது மனித உயிரிகளை காக்கவும் பொருள் இழப்பைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், ரசல் கைமாவில் போலீஸ் பணிகளை விரைவுபடுத்தவும் உதவும் என்று அவர் கூறினார்.
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உலகளாவிய வாய்ப்புகளைத் தழுவிக்கொள்ள அரசாங்கம் முயல்வதால், நிலையான வளர்ச்சியை அடைய சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ராசல் கைமா காவல்துறை ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.