UAE Tamil Web

அபுதாபி: ரமலானை முன்னிட்டு கடுமையான விதிமுறைகளை வெளியிட்ட அரசு..!

ramadan

ரமலானை முன்னிட்டு அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், அபுதாபி சுகாதாரத்துறை மற்றும் அபுதாபி முதன்மை சுகாதர மையம் ஆகியவை இணைந்து கொரோனா முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதன்படி,

- Advertisment -

  • கொரோனா நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே நோன்பு இருத்தல் வேண்டும்.
  • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே இப்தார் மற்றும் சஹர் கூடுதலில் பங்கேற்கவேண்டும்.
  • ஆன்லைன் மூலமாக மட்டுமே இப்தார் உணவு வழங்கல்களுக்கான நிதியுதவி நடைபெறவேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தவிர்த்து வீடுகள், மசூதிகள் அல்லது உணவகங்கள் முன்பாக இப்தார் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் 30 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.
  • ஜக்காத் மற்றும் யாசகர்களுக்கான நன்கொடைகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களின் வலைத்தளங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மத ஆய்வுகள் விரிவுரைகள் மற்றும் புனித குரான் பாராயண அமர்வுகளும் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன.
  • குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ரமலான் இரவில் பிறரது வீடுகளுக்குச் செல்லாமல், காணொளிக் காட்சி மூலமாகவே தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவேண்டும்.
  • தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் இப்தார் டெண்ட் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கூட்டமாக ஒன்று சேர்தல், பிற ரமலான் டெண்ட்களை அமைத்தல், பிறர் வீட்டிற்குச் செல்தல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களுக்கு நேரில் சென்று ரமலானுக்கான பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, ஆன்லைன் மூலமாகவே அவற்றை மேற்கொள்ளவேண்டும்.
  • உறவினர்கள், அண்டை அயலாருடன் உணவுகளை பரிமாறிக்கொள்ள கூடாது.
  • எளிதில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் கூட்டமாக ஒன்றிணையவோ பொது இடங்களுக்கு அடிக்கடி செல்லவோ கூடாது.
  • கள ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். விதிமுறைகளை மீறுவோர் மீது அட்டர்னி ஜெனரலிடம் புகாரளிக்கப்படும்.
  • பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  • ஆல்கஹால் கலந்த சானிடைசர் மூலமாக கைகளை அவ்வப்போது சுத்திகரித்தல் வேண்டும் அல்லது சோப் கொண்டு குறைந்தபட்சம் 20 நொடிகளுக்கு கைகளை நன்றாகக் கழுவவேண்டும். இரண்டு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.