UAE Tamil Web

துபாய்: இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்கான கட்டுப்பாடுகளை விதித்த அரசு..!

Ramadan 2020 likely date revealed in UAE

ரமலான் துவங்க இருப்பதை முன்னிட்டு துபாய் முழுவதிலும் உள்ள மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்துவதற்காக விதிமுறைகளை துபாய் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நிறுவனத்துறை வெளியிட்டுள்ளது. துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.

- Advertisment -

  • தொழுகைக்கான அழைப்பான பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து தொழுகை நடந்து முடியும்வரை மசூதிகள் திறக்கப்பட்டே இருக்கும்.
  • மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்த அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
  • பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து 5 வது நிமிடம் இஷா தொழுகை நடைபெறும்.
  • பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து கட்டாய சபை தொழுகை (congregational obligatory prayer) நடந்து முடிவும் வரையில் மசூதிகள் திறந்தே இருக்கும்.
  • இரண்டாவது முறை மற்றும் தனியாளாக தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனையாளர்கள் கூட்டமாக ஒன்றிணைவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • தொழுகை முடிந்தவுடன் அனைத்து மசூதிகளும் உடனடியாக மூடப்படவேண்டும்.
  • மசூதிகளுக்கு வெளியே உணவு மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்துவதையும் கூட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்த்தல் வேண்டும்.

இதுகுறித்துப் பேசிய துபாய் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கான துறையின் தலைமை இயக்குனர் ஹமாத் அல் ஷேக் அஹமது அல் ஷைபானி,”சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரமலான் முழுவதும் மசூதிகள் ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப்படும். ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இரவு நடைபெறும் கியம்-உல்-லைல் (Qiyam-ul-layl) தொழுகை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

மசூதிகளில் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்கிறது. இருப்பினும் விருப்பமுள்ள நபர்கள் காணொளிக் காட்சி மூலமாக விரிவுரைகளில் பங்கேற்கலாம். அதேபோல, தொழுகை நடத்துபவர்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாக குரான் வாசிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்தார் மற்றும் அன்பளிப்பு டெண்ட், இப்தார் டேபிள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே அன்பளிப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஷைபானி தெரிவித்தார்.