UAE Tamil Web

30 நாட்கள் நீடிக்கும் ரமலான்; நோன்பு நேரங்களை கணித்து வெளியிட்ட ஆய்வாளர்கள்..!

Zayed-Mosque

இந்த வருட ரமலான் பண்டிகை 30 நாட்கள் நீடிக்க இருக்கிறது என வானியல் அடிப்படையிலான கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 13 (செவ்வாய்க்கிழமை) ரமலான் மாதம் துவங்கும் என வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். ஷவ்வால் 1 ஆம் தேதி அதாவது ஈத் அல் பித்ர் பண்டிகையானது மே 13 ஆம் தேதி கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு நேரங்களையும் ஜர்வான் கணக்கிட்டிருக்கிறார். அதன்படி,

அபுதாபியில் ரமலானின் முதல் தேதி அதிகாலை 4.43 மணிக்கு நோன்பு தொடங்கும் மற்றும் இஃப்தார் மாலை 6.47 மணிக்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் நோன்பானது ஒரு நாளில் 14 மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடிக்கும்.

போலவே ரமலான் 30 ஆம் தேதி நோன்பானது அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி இரவு 7.01 மணிக்கு முடிவடையும் என்றும், இதனால் இறுதி நோன்பானது ஒரு நாளில் 14 மணி முதல் 46 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு வைக்கக்கூடிய நேரமான ஸகர் மற்றும் இஃப்தார் நேரங்களைப் பொறுத்தவரை ஃபுஜைராவும் கோர்ஃபக்கானும் அபுதாபியை விட 7 நிமிடங்கள் முன்னதாக இருக்கும் எனவும் அல் குவைபாத் மற்றும் அல் சிலா 11 நிமிடங்கள் பின்னால் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நோக்கும்போது ஃபுஜைராவுக்கும் அல் குவைஃபாத்துக்கும் இடையிலான நேர வேறுபாடு 18 நிமிடங்கள் என்பது விளங்கும்.

Zayed-Mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap