UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு அமீரகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்..!

prayer

துபாய், அஜ்மான், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் போன்ற எமிரேட்ஸ்களில் வரும் ரமலானை முன்னிட்டு கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisment -

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொண்டாடப்படும் இரண்டாவது ரமலான் பண்டிகை இதுவாகும்.

ரமலான் பண்டிகை தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

அமீரகத்தில் கடந்த வருடம் மசூதிகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் குடியிருப்பாளர்கள் அனைவரும் அவர்களின் வீட்டிற்குள்ளேயே ரமலான் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடினர். கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் மசூதிகள் அனைத்தும் திறந்து இருக்கும். சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகையும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எமிரேட்ஸுக்குமான பொதுவான விதிமுறைகள்:
  • அமீரகம் முழுவதும் தாராவீஹ் தொழுகைகள் நடத்தப்படும்.
  • பெண்களுக்கான தொழுகை இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • கூட்டமாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பாக இப்தார் நேரங்களில் கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஒரே வீட்டில் வசிப்பவர்கள் அவர்களின் இப்தார் உணவை பகிர்ந்து சாப்பிட்டு கொள்ளலாம்.
  • உணவகங்களுக்கு உள்ளேயோ அல்லது முன் பகுதியிலேயோ இப்தார் உணவு விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எமிரேட்ஸ் வாரியான கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள்.

துபாய்:
  • கூட்டமாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ரமலான் டெண்டுகள், இப்தார் டெண்டுகள், டொனேஷன் டெண்டுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • போதுமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் தாராவீஹ் தொழுகைகளை மசூதிக்குள் செய்துகொள்ளலாம்.

ஷார்ஜா:
  • இப்தார் டெண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • உணவகங்களின் உள்ளேயோ அல்லது முன் பகுதியிலேயோ இப்தார் உணவு வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • மசூதிக்கு வெளியே குழுக்களாக கூட்டமாக கூடுவது, காரின் முன்போ , உணவகங்களின் முன்புறம் மற்றும் தெருக்கள் போன்ற இடங்களில் இப்தார் உணவு வழங்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இப்தார் உணவிற்காக வழங்கப்படும் சிறப்பு ஆஃபர்களுக்கான விளம்பரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • எமிரேட்ஸில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே இப்தார் உணவுகளை விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அஜ்மான்:
  • ரமலான் டெண்டுகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே பாதுகாப்பான இடங்களில் இப்தார் உணவுகளை விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரம் தொண்டு நிறுவனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் இப்தார் உணவுகளானது அஸர் தொழுகைக்குப் பிறகும், மஹரிப் தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் கொடுத்து முடிக்கப்பட வேண்டும்.
ராஸ் அல் கைமா:
  • இப்தார் உணவை உணவகங்களுக்கு முன்பாகவோ, உணவகங்களுக்கு உள்ளேயோ விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • மசூதிக்கு வெளியே இப்தார் டெண்டுகள் அமைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • தொழிலாளர்களின் குடியிருப்பு வளாகங்களில் இப்தார் உணவுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உணவுகள் இறுக்கமாக மூடப்பட்ட பாக்ஸ்களிலோ அல்லது பையிலோ இருக்கவேண்டும்.
  • கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது குடியிருப்பாளர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

உம் அல் குவைன்:
  • குரான் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • வீடுகள் சந்திப்பு (home visit) மற்றும் குடும்பமாக கூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாறிக் கொள்வதும் மற்றும் விநியோகம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இப்தார் மற்றும் வர்த்தக ரீதியான ரமலான் டெண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இப்தார் உணவுகளை விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பிச்சைக்காரர்களை கண்டால் உடனடியாக புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.