UAE Tamil Web

அமீரகம்: ரமலானை முன்னிட்டு 30,000 பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்க அமைச்சகம் உத்தரவு..!

ShoppingFestivel

புனித மாதமான ரமலானை முன்னிட்டு 30,000 பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்க அமீரக நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதிமுதல் இந்த தள்ளுபடிக்காலம் துவங்க இருக்கிறது.

- Advertisment -

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரமலான் கால தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களுக்கு 25 முதல் 75 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது. அமீரகம் முழுவதிலும் உள்ள 894 விற்பனையகங்களில் மக்கள் மேற்கண்ட தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை அமைச்சகத்தின் போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இயக்குனர் மர்வான் அல் ஸ்பூசி இதுகுறித்துப் பேசுகையில்,” ரமலானை முன்னிட்டு பல்வேறு கோ-ஆப்பரேட்டிவ் மற்றும் விற்பனை நிலையங்கள் தள்ளுபடியை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளன. இதனடிப்படையில் எங்களுடைய பங்குதாரர்களான கோ-ஆப்பரேட்டிவ் மற்றும் விற்பனை நிலையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார்.

“இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் சில விற்பனை நிலையங்கள் 30,000 வரையிலான பொருட்களுக்கு தள்ளுபடி அளிக்க இருக்கின்றன. ஓப்பன் பேஸ்கட்கள் (Open Baskets) மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தேவையான அளவு பெற்றுக்கொள்ளலாம். அதேபோல ரமலான் மாத தேவைக்கான பேஸ்கட்களும் தள்ளுபடி விலையில் இந்த விற்பனை நிலையங்களில் கிடைக்கவிருக்கின்றன. 50 மற்றும் 140 திர்ஹம்ஸ் மதிப்பில் தள்ளுபடியை விற்பனை நிலையங்கள் அளிக்க இருக்கின்றன. ரமலான் முழுவதும் இந்த தள்ளுபடி அமலில் இருக்கும்” என அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு அசோசியேஷன் மற்றும் விற்பனை நிலையங்கள் ஆன்லைன் மூலமாகவும் தள்ளுபடிகளை அளிக்க இருப்பதாக ஸ்பூசி தெரிவித்தார். சமூக இடைவெளியை வலியுறுத்துவதன் நோக்கத்தோடும், சமூக பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு ஸ்பூசி மக்களை வலியுறுத்தினார்.