UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு நள்ளிரவு தொழுகைக்கு (கியாம்-உல்-லைல்) அரசு அனுமதி..! – விதிமுறைகள் என்ன?

Ramadan 2021

ரமலான் மாதத்தில் நள்ளிரவு நேரத்தில் நடத்தப்படும் கியாம்-உல்-லைல் தொழுகைக்கு அமீரக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் நினைவுபடுத்தியுள்ளனர்.

நள்ளிரவு 12 மணிமுதல் 12.30 மணிவரையில் இந்தத் தொழுகை நடைபெறவேண்டும். தொழுகை முடிந்த பின்னர் மசூதிகள் உடனடியாக மூடப்படவேண்டும். அத்தோடு இஃதிகாஃப் -ற்கு (I’tikaf) அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதிகளுக்குச் செல்லாமல், தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ரமலான் மாதத்தில் கடைசி 10 நாட்களுக்கு நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் தொழுகை நடைபெறும்.

முன்னதாக இரவு நேரத் தொழுகையான தராவீஹ் -க்கு அரசு அனுமதியளித்ததும், தற்போது அமீரகம் முழுவதிலும் உள்ள மசூதிகளில் இந்தத் தொழுகை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Ramadan 2021
0 Shares
Share via
Copy link