ரமலான் மாதத்தில் இஷா தொழுகைக்குப் பின்னர் தொழுகப்படும் தராவீஹ் தொழுகையை அமீரகம் முழுவதிலுமுள்ள மசூதிகளில் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தொழுகைக்கான (தராவீஹ் மற்றும் இஷா) நேரம் 30 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழுகைக்குப் பின்னர் மசூதி உடனடியாக மூடப்படவேண்டும்.
பெண்களுக்கான தொழுகை இடங்கள் வழக்கம்போல, மூடப்பட்டிருக்கும்.
மதம் குறித்த பாடங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. காணொளிக் காட்சி மூலமாக இவை நடைபெற அனுமதியளிக்கப்படுள்ளது.
இருப்பினும் ரமலான் துவங்குவதற்கு முன்னர், அரசு விரிவான கட்டுப்பாடுகளை வெளியிடும் என நம்பப்படுகிறது.