அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்களை அரசு அறிவித்தது.
ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டது.
ரமலான் மாதத்தில் மசூதிகள் முழுவதும் தராவீஹ் எனப்படும் இரவு நேரத் தொழுகைகளையும், இறுதி 10 நாட்களில் கியாம்-உல்-லைல் நள்ளிரவுத் தொழுகைகள் நடைபெறும்.
வானியல் கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 2 தேதி ரமலானின் முதல் நாளாக இருக்கும். இஸ்லாமிய முறைப்படி பிறை (சந்திரனை) பார்ப்பதன் மூலம் சரியான தேதி தீர்மானிக்கப்படும்.
இஸ்லாமிய மாதங்களில் பிறையைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்களாக அமையும். இந்த ஆண்டு, ரமலான் 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமீரகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வார இறுதி நாளாக (வெள்ளி அரை நாள், சனி மற்றும் ஞாயிறு) ஆகிய கிழமையாக மாற்றப்பட்டது. அதாவது, புனித மாதத்தில் வெள்ளிக்கிழமைகள் வேலை நாளாக இருக்கும். திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டது.
ரமலான் மாத தொடக்கத்தில் நோன்பின் நேரம் 14 மணி நேரமாக இருக்கும். அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு பிறையைப் பொறுத்து 5 நாட்கள் வரை நோன்பு பெருநாள் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது.
இதோ அமீரகத்தில் 2022 ரமலான் மாதத்திற்கான நேர அட்டவனை: https://www.khaleejtimes.com/ramadan-prayer-time-table-uae