2022 ஆம் ஆண்டில் ஈத் அல் பித்ர், ரமலான் தினங்கள் எப்போது வரும் என்ற கணிப்பு தற்போது வெளிவந்துள்ளது. விண்வெளி மற்றும் வானியல் ஆராய்ச்சிக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹீம் அல் ஜார்வான் 2022 ஆம் ஆண்டிற்கான ரமலான் சனிக்கிழமை, ஏப்ரல் 2, 2022 அன்று வரும் எனக் கணித்துள்ளார்.
அதேபோல, திங்கள், மே 2, 2022 அன்று ஈத் அல் பித்ர் பண்டிகையானது கொண்டாடப்படும் என ஜார்வான் கணித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தேதிகள் கணிப்பீடுகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் பண்டிகைத் தேதி, பிறை பார்க்கும் கமிட்டியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
