UAE Tamil Web

ரமலான் : இறைச்சிக்கூடங்கள், மீன் மார்கெட்கள் திறக்கப்படும் நேரங்கள் அறிவிப்பு..!

fish market

ரமலான் மாதத்தில் ராஸ் அல் கைமாவில் உள்ள இறைச்சிக்கூடங்கள், மீன் மார்கெட்கள் திறக்கப்படும் நேரத்தினை ராஸ் அல் கைமா நகராட்சி வெளியிட்டுள்ளது.

தி செண்ட்ரல் அபாட்டைர் அல் ஃபலாய் (The central abattoir Al Falaih) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். ராஸ் அல் கைமா இறைச்சிக்கூடம் மற்றும் அல் கைல் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையில் திறந்திருக்கும்.

ராஸ் அல் கைமா மீன் மார்கெட் மற்றும் தக்டகா (Dakdaga) மீன் மார்கெட் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையில் திறந்திருக்கும். அல் மைரிட் (Al Mairid) மதியம் 1 மணிமுதல் இரவு 9 மணிவரையில் திறந்திருக்கும்.

கால்நடை சந்தைகள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். இருப்பினும் அல் தரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சந்தை காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரையில் திறந்திருக்கும்.

ரமலான் மாதத்தில் பொருட்கள்/இறைச்சிகள் வாங்க விரும்பும் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றுமாறு ராஸ் அல் கைமா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.