ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) புனித ரமலான் மாதத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரத்தை அறிவித்துள்ளது. புனித மாதத்தில் வேலை நேரங்களில் இரண்டு மணிநேரம் குறைக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இது ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 36 மணிநேரமாக குறைக்கப்படும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அமைச்சகம் கூறி இருப்பது, “தங்கள் பணியின் தேவைகளுக்கு ஏற்ப, நிறுவனங்கள் ரம்ஜான் நாட்களில் தினசரி வேலை நேர வரம்புகளுக்குள் பயன்படுத்தலாம்.”
இதை தாண்டி எந்த கூடுதல் மணிநேர வேலையும் கூடுதல் நேரமாக கருதப்படலாம், அதற்காக தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். முன்னதாக, ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் கவர்ன்மென்ட் ஹூமன் ரிசோர்சஸ் (FAHR) ஃபெடரல் அதிகாரிகளின் ஊழியர்களுக்கு புனித ரமலான் மாதத்தின் அதிகாரப்பூர்வ வேலை நேரத்தை நிர்ணயித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
சுற்றறிக்கையின்படி, அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் இருக்கும்.