22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

உலகளவில் 7 சுகாதார குறியீடுகளில் முதலிடம் பிடித்த அமீரகம்..!

flag

2019 ஆம் ஆண்டிற்கான 7 உலகலாவிய சுகாதார குறியீடுகளில் அமீரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பெடரல் போட்டித்திறன் மற்றும் புள்ளியியல் ஆணையம் (Federal Competitiveness and Statistics Authority) தெரிவித்துள்ளது.

லெகடம் ப்ராஸ்பரிட்டி இன்டெக்ஸ் 2019 (Legatum Prosperity Index 2019) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமீரகம் கீழ்கண்ட வகைமைகளில் உள்ள சுகாதார குறியீடுகளில் முதலிடம் பெற்றுள்ளதாக FCSA சுட்டிக்காட்டியிருக்கிறது.

  1. குறைவான எச்.ஐ.வி பரவல் குறியீடு
  2. தேசிய முன்கூட்டிய நோய் கண்டறிதல் குறியீடு
  3. குறைந்த அளவிலான உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கான குறியீடு.
  4. சுகாதார பாதுகாப்பு குறியீடு
  5. ஊட்டச்சத்து குறைபாடு விகித குறியீடு
  6. ஒவ்வொரு 100,000 பேருக்கான குறைவான மலேரியா தொற்று குறியீடு.
  7. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பரவலான போதிய வளர்ச்சியின்மைக்கான  குறியீடு.

கடந்த சில பத்தாண்டுகளாக சுகாதாரத்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அமீரகம் எடுத்ததன் விளைவாக இந்த சாதனையை அமீரகம் படைத்திருக்கிறது.

சுகாதார அமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது, கேன்சர் மற்றும் வாழ்வியலை பாதிக்கும் நோய்களான நீரழிவு மற்றும் இதய நோய்களை முன்கூட்டியே தடுத்தல் மற்றும் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவற்றை 2021 ஆம் ஆண்டிற்கான இலக்காக அமீரகம் கொண்டுள்ளது.

புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையைக் குறைத்தல், பெருநோய் மற்றும் சுகாதார அச்சுறுத்தலுக்கு தயாராக இருப்பதை உறுதிசெய்தல் மற்றும் சுகாதார தரத்தின் அடிப்படையில் அமீரகத்தை 2021 ஆம் ஆண்டிற்குள் சிறந்த நாடாக மாற்றுவது ஆகியவற்றையும் இலக்காக அமீரகம் கொண்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான அமீரக பட்ஜெட்டில் 8 சதவிகிதத்தினை சுகாதார மற்றும் சமூக தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியிருக்கிறது அரசு. சுகாதாரத் துறையின் வளர்ச்சியானது தொடர்ந்து அதிகரிக்கும் பொருட்டு அந்த துறையில் செய்யப்பட்டிருக்கும் முதலீடை அடுத்த பத்தாண்டிற்குள் 300 சதவிகிதம் வரையில் உயர்த்துவது என அமீரகம் திட்டமிட்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டில் நாட்டில் இருந்த 8,000 மருத்துவமனை படுக்கைகள், 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் 14,000 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாயின்ட் கமிஷன் இண்டர்நேஷனல் (Joint Commission International) வகுத்திருக்கும் தரநிலைகளின் அடிப்படையில் அமீரகத்தின் 85 சதவிகித மருத்துவமனைகள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவை. இப்படி உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட சுகாதார வசதிகளை பெற்றிருக்கும் நாடுகளில் அமீரகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

உலகளவில் மருத்துவ சுற்றுலாவுக்கான இடங்களில் முக்கியமானதாக மாறிவரும் அமீரகம் இதன்மூலம் 2018 ஆம் ஆண்டில் 12.1 பில்லியன் திர்ஹம்ஸ் வருமானத்தினை ஈட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டு அமீரகம் அடைந்திருந்த வருமானத்தைக்காட்டிலும் இது 5.5 சதவிகிதம் அதிகமாகும்.



error: Alert: Content is protected !!