UAE Tamil Web

பணிபுரிய உகந்த சிறந்த நாட்டுகளின் பட்டியல் – டாப் 10ல் அமீரகம்..!

uae

பிரபல நிறுவனமான HSBC உலகளவில் தங்குவதற்கு, பணிபுரிவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமீரகத்திற்கு 4 வது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அமீரகம் 10 இடங்கள் முன்னேறி 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் சுமார் 20,000 பேரிடம் நடத்தப்பட்ட பிரம்மாண்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த பட்டியலானது தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார நிலைமை எப்படி இருந்தது? பணி நிரந்தரம், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இப்பட்டியலில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

HSBC நிறுவனத்தின் 14 வது ஆண்டு அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

uae
4 Shares
Share via
Copy link