UAE Tamil Web

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு; 2 ஆம் இடத்தில் அமீரகம் ; அதிர்ச்சி அளிக்கும் இந்தியாவின் நிலை..!

uae

2021 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை பிரபல குளோபல் ஃபைனான்ஸ் மேகசீன் (Global Finance magazine) வெளியிட்டுள்ளது. பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இதில் அமீரகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தனிப்பட்ட பாதுகாப்பு, இயற்கை பேரிடர் நிகழ்வுகள் ஆகியன போன்ற குறியீடுகளின் அடிப்படையில் பட்டியலானது தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பட்டியல் தயாரிப்பில் கருத்தில்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் 134 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் இந்தியாவிற்கு 91 வது இடமும் பாகிஸ்தானிற்கு 116 வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரையில் கத்தார் 3 ஆம் இடத்திலும் பஹ்ரைன் 12 ஆம் இடத்திலும் குவைத் 18 வது இடத்திலும் சவூதி 19 வது இடத்திலும் 25 வது இடத்தில் ஓமானும் இருக்கின்றன.

டாப் 10 பாதுகாப்பான நாடுகள்

  1. ஐஸ்லாந்து
  2. ஐக்கிய அரபு அமீரகம்
  3. கத்தார்
  4. சிங்கப்பூர்
  5. பின்லாந்து
  6. மங்கோலியா
  7. நார்வே
  8. டென்மார்க்
  9. கனடா
  10. நியூசிலாந்து

டாப் 10 பாதுகாப்பற்ற நாடுகள்

  1. வடக்கு மாசிடோனியா
  2. ஏமன்
  3. பெரு
  4. மெக்சிகோ
  5. பிரேசில்
  6. போஸ்னியா & ஹெர்சகோவினா
  7. நைஜீரியா
  8. கௌதமாலா
  9. கொலம்பியா
  10. பிலிப்பைன்ஸ்
uae
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap