அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜ்டவுன் இன்ஸ்டிடியூட் ஃபார் வுமன் (Georgetown Institute for Women) அமைப்பு அமைதி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் ஒதுக்கப்படும் இடங்கள், செல்போன் உபயோகம், பொருளாதார நிலை, பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றின் வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான இப்பட்டியலில் அமீரகம் 20 இடங்கள் முன்னேறி 24 வது இடத்தைப் பிடித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 98.5 சதவீத பெண்கள் தாங்கள் அமீரகத்தில் இருப்பதைப் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
பட்டியலில் இந்தியா 148 இடத்தில் உள்ளது. பாக்கிஸ்தான் 167 வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் (170) உள்ளன.
அமைதி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பில் சிறந்து விளங்கும் டாப் 10 நாடுகள்
- நார்வே
- பின்லாந்து
- ஐஸ்லாந்து
- டென்மார்க்
- லக்ஸம்பர்க்
- சுவிட்சர்லாந்து
- ஸ்வீடன்
- ஆஸ்திரியா
- ஐக்கிய ராஜ்ஜியம்
- நெதர்லாந்து
அமைதி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பில் கடைசி இடம் பிடித்த 10 நாடுகள்
- ஆப்கானிஸ்தான்
- சிரியா
- ஏமன்
- பாகிஸ்தான்
- ஈராக்
- தெற்கு சூடான்
- சாட்
- காங்கோ ஜனநாயகக் குடியரசு
- சூடான்
- சியர்ரா லியோன்
