UAE Tamil Web

ஓமைக்ரான் தோன்றிய நாடுகளின் பயணிகளை அனுமதிக்க அமீரகம் முடிவு…

ஓமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதித்த தடை உத்தரவை நீக்க அமீரகம் அரசு முடிவ செய்துள்ளது.

அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஓமைக்ரான் தோன்றிய 12 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நவம்பர் 2021 இல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஜனவரி 29 ஆம் தேதி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து மேலாண்மை ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனவரி 29 முதல், கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, போட்ஸ்வானா, மொசாம்பிக், ஈஸ்வதினி, லெசோதோ, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமீரகத்தில் நுழைய மீண்டும் அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், இந்த நாடுகளில் இருந்து நுழைவதற்கான நிபந்தனைகளில் அமீரகம் வந்தவுடன் மற்றொரு ஆர்.டி – பி.சி.ஆர். பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் வருகைக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக கோவிட் பரிசோதனைய மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap