34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகம் : தொலைந்துபோன சிம் கார்டிற்கு விதிக்கப்பட்ட 3,597.55 திர்ஹம்ஸ் கட்டணம் – விசாரிக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

sim du

அஜ்மான் குடியிருப்பாளரான பெரோஸ் அக்தர், 2016 ஆம் ஆண்டு தனது எமிரேட்ஸ் ஐடியை உபயோகப்படுத்தி வேறு ஒரு நபர் டூ (du) தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து சிம்கார்டு பெற்றிருப்பதாகவும், சிம் கார்டு வாங்க சமர்ப்பிக்கப்பட்ட போலியான பணி நியமன சான்றிதழில் தவறான கையெழுத்து இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய எமிரேட்ஸ் ஐடியின் மூலம் டூ நிறுவனம் இன்னொருவருக்கு வழங்கிய அந்த சிம் கார்டிற்கான பயன்பாட்டுக் கட்டணம் தனக்கு விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அக்தர் இதுகுறித்து உதவுமாறு கல்ஃப் செய்தி நிறுவனத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அக்தர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் டூ நிறுவனத்தின் கிளைக்கு, தொலைந்துபோன தனது சிம் கார்டு குறித்து பதிவுசெய்ய சென்றிருக்கிறார். அப்போது தன்னிடம் இருந்த விசா, பணி நியமன சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்தும் டூ நிறுவனம் அந்த சிம் கார்டிற்கான பயன்பாட்டுக் கட்டணமான 3,597.55 திர்ஹம்சை செலுத்த தன்னை வற்புறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தன் தரப்பு ஆதாரங்கள் அனைத்தையும் அவர் சமர்ப்பிக்கவே தொலைத் தொடர்பு நிறுவனம் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து டூ நிறுவனம், “திரு. அக்தரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தவறுதலாக ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை நிறுவனம் முழுமையாக விலக்கிகொண்டது. எங்களுடைய வாடிக்கையாளர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு திரு. அக்தரின் விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம்” எனத் தெரிவித்திருந்தது.

“இதன் காரணமாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்த டூ, தவறுதலாக எனக்கு விதிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தது. கல்ஃப் செய்தி நிறுவனம் இல்லையென்றால் எனக்கு இந்த உதவி கிடைத்திருக்காது. ஆகையால் அந்நிறுவனத்திற்கு எனது நன்றியத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அக்தர் தெரிவித்தார்.

அக்தரின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்: ஜூன் 15,

நிறுவனம் இதுகுறித்து பதில் தெரிவித்திருந்த நாள் : ஜூன் 22. (அன்றே சிக்கலைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.)

இதையும் படிங்க.!