தொலைபேசி மோசடியில் 2 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை இழந்த நபர். பணத்தை உடனடியாக மீட்ட அமீரக காவல்துறை.!

phone scam
Image Credits- Khaleej Times

தொலைபேசி மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர், தாமாக முன்வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு வீடியோ மூலமாக பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை அபுதாபி போலீஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர் அவர் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்.

2 லட்சம் திர்ஹம்ஸ் பரிசு:

பிப்ரவரி 2018ல் பாதிக்கப்பட்டவர் மனைவியிடமிருந்து ஒரு ஆடியோ மெசேஜ் (audio message) வந்துள்ளது. அதில் அவரது மனைவி கூறியது என்னவென்றால், நமக்கு 2 லட்சம் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்துள்ளது எனவும் நான் ஒரு அமீரக வாசி தொலைபேசி எண் தருகிறேன், அந்த எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டு பேசினால் பணத்தை நேரடியாக நமது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடுவதாக கூறினார் என்று கணவனிடம் கூறியுள்ளார்.

ஆசையின் விளைவு:

கணவரால் இதை உண்மை என்று நம்ப முடியவில்லை என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். இருந்தபோதிலும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்ததில் மறுமுனையில் பேசியவன் தான் சொன்ன அனைத்தும் உண்மை தான் என்று கூறியுள்ளான்.

மேலும் உங்கள் ஏடிஎம்(ATM) கார்டின் முன் மற்றும் பின் பக்கத்தையும், அடையாள அட்டையின் நகலையும் அனுப்பி விட்டால் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியும் என்று மோசடிகாரன் கூறியுள்ளான். இவரும் ஏடிம் எண்ணை கொடுத்துள்ளார். இந்த தகவலை கொடுத்த சில நிமிடங்களில் அவர் வங்கி கணக்கிலிருந்து 2 இலட்சம் திர்ஹம்ஸை மோசடி கும்பல் திருடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இழந்த பணம் மீட்பு:

உடனே சிறிதும் தாமதிக்காமல் அன்றைய தினமே இந்த மோசடியை தடுக்கும் அமைப்பிற்கு (anti fraud unit) தகவல் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்டரின் கணவர். உடனே மோசடியை தடுக்கும் அமைப்பு முழு பணத்தையும் மீட்டு இவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதற்காக அவர் அபுதாபி போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வங்கி சார்ந்து ஏதாவது பிரச்சனையோ சந்தேகமோ இருந்தால் நேரடியாக வங்கிக்கு சென்றே விசாரிக்க வேண்டும். எந்த வங்கியும் வாடிக்கையாளரிடமிருந்து வங்கி விவரங்களையோ, வங்கி எண் மற்றும் ஏடிஎம்(ATM) சம்பந்தமான விவரங்களையோ கேட்காது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளுக்கோ அல்லது குறுஞ்செய்திகளுக்கோ (message) பதிலளிக்க வேண்டாம் என்று மற்றொரு அறிவுரையும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

அசத்தும் அபுதாபி போலீஸ்:

இந்த வீடியோவை அபுதாபி போலீஸ் “கவனமாக இருக்க வேண்டும் (Be Careful campaign)” என்ற பிரச்சாரத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சாரமானது தொலைபேசி மூலமாக வரும் அனைத்து மோசடிகளையம் தடுத்து மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த பிரச்சாரத்தில் மட்டும் இதுவரை 13 மோசடி கும்பலிடமிருந்து 28 க்கும் மேற்பட்ட தொலைபேசி மோசடி குற்றவாளிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times

Loading...