UAE Tamil Web

இப்படியெல்லாம் கூட நடக்குமா..? – அமீரகத்தில் ஆன்லைன் மூலமாக நடந்த விபரீதம்..!

dirhams

அமீரகத்தில் வசித்துவரும் 65 வயது சிரிய நாட்டைச் சேர்ந்தவர் அன்று வழக்கம்போல இன்ஸ்டாகிராம் பக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது, விளம்பரம் ஒன்றைப் பார்த்திருக்கிறார். அமெரிக்க டாலர்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதற்கு ஈடான திர்ஹம்சை கொடுத்து அமெரிக்க டாலர்களாக மாற்றிக்கொள்ள அணுகவும் என போன் நம்பர் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

முதியவரும் அணுகியிருக்கிறார். போனில் பேசியவர் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் தனக்கு அமீரகத்தில் நண்பர்கள் இருப்பதாகவும் அவர்களின் மூலமாக டாலர்களைத் தருவதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியதன் அடிப்படையில் இரண்டு நபர்களை சந்திக்க 75,000 திர்ஹம்சை எடுத்துக்கொண்டு முதியவர் கிளம்பியிருக்கிறார். கார் பார்க்கிங் பகுதியில் நின்ற காருக்குள் வைத்து இரண்டு பேர் சூட்கேசை முதியவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் 30,000 அமெரிக்க டாலர்கள் இருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

அவர் டாலர்களை எடுத்துப் பார்க்கையில் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். அது போலியான டாலர்கள் என்பதை அவர் அறிந்து சுதாரிப்பதற்குள் இரண்டு ஆசாமிகளும் காரில் வேகமாக சென்றுவிட்டனர்.

உடனடியாக காவல்துறையிடம் தகவலைத் தெரிவிக்க கேமரூன் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மற்றொருவர் இன்னும் காவல்துறையிடம் சிக்கவில்லை.

இந்த வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

dirhams
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap