UAE Tamil Web

இது புது டெக்னிக்கா இருக்கே..! – இப்படியும் கொள்ளையடிக்கலாம் என பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறை..!

UAE residents alert Cops warn about 'spit-sneeze' scam

அமீரக காவல்துறை பொதுமக்களுக்கு கடந்த வியாழக்கிழமை அன்று எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

- Advertisment -

உங்களின் மீது எச்சில் உமிழ்ந்தோ அல்லது உங்களின் மிக அருகில் தும்மும் போதோ உங்களுடைய கவனம் சிதறுகையில் உங்களுடைய பொருட்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த எச்சரிக்கை வீடியோ ஒன்றினை ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், முன்பின் அறியாத நபர்கள் தங்களது கார் பழுதடைந்துவிட்டது உதவி செய்யுங்கள் எனக் கேட்டால் பொதுமக்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது.

அதேபோல, டிரைவர் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை வைக்க வேண்டாம் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.