UAE Tamil Web

அமீரக வாசிகளே எச்சரிக்கை: சாலைகளில் இதை பார்த்தால் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்காதீர்கள்.! உள்துறை அமைச்சகம்

video

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் இந்த வார இறுதியில் சாலைகளில் ராணுவ வாகனங்கள் சகஜமாக செல்வதை பார்க்க முடியும். ஏனென்றால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ‘யூனியன் 49’ களப்பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக அமீரக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

- Advertisment -

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள அமைச்சகம், “டிசம்பர் 10, வியாழக்கிழமையான நாளை முதல் டிசம்பர் 12 சனிக்கிழமை வரை பல்வேறு எமிரேட்களில் ராணுவப் பிரிவுகளின் இயக்கத்துடன் களப் பயிற்சிகளை உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும்” என்று அறிவித்துள்ளது.

mili

இதனை அடுத்து வெவ்வேறு எமிரேட்டுகளின் வீதிகளில் ராணுவ பிரிவுகள் மற்றும் போலீஸ் ரோந்துகளின் வாகனங்கள் நடமாட்டம் இருக்கும். எனவே பொதுமக்கள் ராணுவ பிரிவுகளின் நடமாட்டத்தை புகைப்படங்களோ அல்லது வீடியோக்களோ எடுக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.