மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பாக இனி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் – DEWA அறிவிப்பு!

UAE residents can contact DEWA on WhatsApp

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி வாட்ஸ்அப் மூலம் துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தை தொடர்பு கொள்ளும் புதிய முறையை DEWA அறிமுகம் செய்துள்ளது.

துபாயில் உள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பாக இனி வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி தெரிந்துக்கொள்ள முடியும், என்று DEWA தெரிவித்துள்ளது.

இந்த புதிய வாட்ஸ்அப் தொடர்பு அணுகுமுறை வாடிக்கையார்களின் மகிழ்ச்சியை ஊக்குவிப்பதாக DEWA கூறியுள்ளது.

அறிவுபூர்வமான சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களை வளப்படுத்த நாங்கள் சதா முயன்று வருவதாக, DEWA மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சயீத் முகமத் அல் தாயெர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் DEWA ஆணையத்துடன் அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள : 04-6019999

Loading...