UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: அமீரகத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவும் – அரசு அறிவித்திருக்கும் போட்டி..!

na20-happiness

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அமீரகத்தின் 49 வது தேசியதினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சீட்ஸ் ஆஃப் யூனியன் (Seeds of the Union) எனப்படும் காணொளித் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

டிஜிடல் விஷுவல் டெக்னாலஜி மூலம் கடல் சூழ்ந்த பரப்பில் சிற்பங்கள் தோன்றும் விதமாக  அமீரகத்தின் 49 ஆண்டுகால வரலாறு விவரிக்கப்பட இருக்கிறது. இதற்காக உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அபுதாபியில் சங்கமித்துள்ளனர்.

அமீரகத்தின் தந்தைகளை இந்த டிஜிடல் விஷுவல் டெக்னாலஜி மூலமாக தோன்றச் செய்ய இருக்கிறார்கள் இந்த வல்லுனர்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திறமை, கடின உழைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்பால் அமீரகத்தில் இம்மாதிரியான பிரம்மாண்ட நிகழ்ச்சியை உருவாக்குவது கடினமல்ல. ஆனால் பொதுமக்களை இதன்மூலம் அசையும்படி உணரச்செய்வது கடினமாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில் அனைவரும் பாதுகாப்பாக அமீரக தேசிய தினத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக உருவாக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரான கல்ஃபான் அல் மஸ்ரோயி (Khalfan Al Mazrouei) தெரிவித்தார்.

அமீரகத்தின் 49 வது தேசிய தினத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு வார்த்தை

அமீரகத்திப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும். உங்களுடைய சொல்லை அமீரக தேசிய தினத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

இணையதளத்திற்குள் நுழைந்தவுடன் Joint The Celebration என்பதைத் தேர்ந்தெடுத்து பின்னர் Word Submission என்பதைக் கிளிக் செய்யவும்.

உள்ளே சென்றவுடன், அமீரகத்தைப் பற்றி நீங்கள் நினைப்பதை ஒரு வார்த்தையில் தட்டச்சு செய்து Submit கொடுக்க வேண்டும்.

அதன்பின்னர் தோன்றும் திரையில் உங்களுடைய பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்து Submit கொடுத்தால் போதும்.

தேசிய கீதம்

முந்தைய போட்டியில் வார்த்தையை உள்ளீடு செய்ததுபோல் இந்த போட்டியில் நீங்கள் வீடியோவை உள்ளீடு செய்யவேண்டும்.

அமீரக தேசிய கீதத்தைப் பாடி அதனை வீடியோவாக எடுத்து, அதை Upload Video என்பதன் மூலமாக உள்ளீடு செய்யவேண்டும்.

@OfficialUAEND என்பதனைப் பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் மக்கள் தங்களது வீடியோவைப் பதிவிடலாம்.

வீடியோக்களைப் பதிவிட வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 30 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் தேசிய தினத்தன்று நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.