வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் உலகமே உள்ளங்கையில் வந்தாகிவிட்டது. அனைத்தையும் டிஜிட்டல் முறையில் அமீரகம் மாற்றி வரும் நிலையில், தற்போது மக்கள் நலன் கருதி புதிய சேவை அறிமுகமாகியுள்ளது. அமீரகத்தில் ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை காண நேரிட்டாலோ, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டாலோ அது குறித்த தகவல்கள் மற்றும் புகார்களை இருந்த இடத்தில் இருந்தே செல்போன் செயலியில் இனி பதிவு செய்யலாம்.
உள்துறை அமைச்சகத்தின் (MOI) செயலியில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்வதை விட்டுவிட்டு உடனடி உதவிபெற செயலியை பயன்படுத்தலாம். செல்போன் செயலி மூலம் புகார்கள் ஏதேனும் பதிவு செய்யும் போது விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
