அமீரகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் போது அதிகமான மொபைல் கட்டணம் ஏற்படுகிறதா?

ஐக்கிய அரபு அமீரக வாசிகள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் போது தங்களின் மொபைல் கட்டணம் குறித்த அதிர்ச்சியா? இனி கவலை வேண்டாம். RTA உங்களுக்கு சில வழிமுறைகளை கூறியுள்ளது.

வெளிநாடுகளில் விடுமுறையை கொண்டாடுவதற்கு சரியாக திட்டமிட்டு, நல்ல பொழுதுபோக்கான இடங்களை தேர்வு செய்தல் அவசியமான ஒன்றாகும்.

அதற்காக சில தங்கும் விடுதிகளில் இருக்கும் வசதிகள் மற்றும் குறைகள் தெரியாமல் சிலர் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் தங்களது மொபைலில் இருக்கும் Data package எவ்வளவு இருக்கு என்பதை மறந்துவிடுகிறார்கள். இதனால் மொபைல் கட்டணம் அதிகமாக எகிறி விடுகிறது.

மேலும், ரோமிங்யின் போது தொடர்பு கொள்வதனால் மொபைல் பில் அதிகம் வசூலிக்கப்படுகிறது, என தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (TRA) தெரிவித்துள்ளது.

பில் அதிர்ச்சியை தடுக்க 3 வழிகள்:

1.சர்வதேச பயணிகளுக்கு என்ன பேக்கேஜ் வழங்கப்படுகிறது, என்பதை அறிய தொலைத்தொடர்பு சேவை மையத்தை அணுக வேண்டும்.

2. நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கில் ரோமிங் வசதி நீங்கள் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

3.அங்கு ஏதேனும் ரோமிங் வசதியில் வரம்புகள் உள்ளதா? என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

இவைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் அதிக மொபைல் கட்டணங்களை ரோமிங் போது தவிர்க்கலாம்.