UAE Tamil Web

ஈரானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. அமீரகத்தில் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.. NCM அளித்த ஆறுதலான செய்தி – வீடியோ உள்ளே

அமீரக குடியிருப்பாளர்கள் நேற்று சனிக்கிழமை மாலை பல இடங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். சிலர் அந்த நிலநடுக்கம் சுமார் 30 வினாடிகள் வரை உணரப்பட்டதாகவும் திகிலுடன் கூறியுள்ளனர்.

தெற்கு ஈரானில் ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மானில் வசிப்பவர்கள் தங்கள் நிலநடுக்க அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஒரு பயனர் நிலநடுக்கத்தின் காரணமாக அவரது வீட்டின் சீலிங்கில் உள்ள விளக்குகள் ஆடுவது போன்ற வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். NCM அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், UAE குடியிருப்பாளர்கள் பூகம்பங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனெனில் நாட்டில் உள்ள கட்டிடங்கள் உலகளாவிய நில அதிர்வு குறியீடுகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன என்றார்.

“இயற்கை ஆபத்துக்களுக்கு எதிரான பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக, அமீரக கட்டிடங்களுக்கு நில அதிர்வு வடிவமைப்புக் குறியீட்டைப் பயன்படுத்துகிறது. நாட்டில் உள்ள அனைத்து கட்டிடங்களும் இந்த வடிவமைப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினர்.

“அபுதாபியில், மக்கள் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கத்தை உணர்கிறார்கள், மேலும் அதன் தீவிரமும் மிகவும் குறைவாக உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap