37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

இந்தியாவிலிருந்து துபாய் மற்றும் ஷார்ஜா திரும்புபவர்கள் விண்ணப்பிக்க புது வழிமுறைகளை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

abudhabi_airport1_

இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அமீரகத்திலிருந்து இந்தியா சென்றடையும் சிறப்பு விமானங்களின் மூலமாகவும், அமீரக சிறப்பு விமானங்கள் மூலமாகவும் ஜூலை 12 – 26 ஆகிய தேதிகளில் இந்தியாவில் உள்ள அமீரக குடிமக்கள் மற்றும் இந்தியர்கள் அமீரகம் திரும்பலாம் என இந்திய மற்றும் அமீரக அரசுகள் அறிவித்திருந்தன.

இதனையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், எதிஹாட் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியா – அமீரகம் இடையேயான சிறப்பு விமான சேவைகளின் பயணத்திட்டத்தை வெளியிட்டன.

இந்தியாவிலிருந்து துபாய் திரும்புபவர்கள் அமீரக குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறையின் தலைமை இயக்குனரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் எனவும், மற்ற எமிரேட்டுகளுக்கு பயணிப்போர் அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம் (ICA) ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் என நேற்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்புபவர்களுக்கான விதிமுறைகளில், இந்தியாவிலிருந்து துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு திரும்புபவர்கள் GDRFA அல்லது ICA விடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

அபுதாபிக்கு திரும்புவோர் கட்டாயம் ICA விடம் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிஹாட் விளக்கம்

அபுதாபியை சேர்ந்த விமான நிறுவனமான எதிஹாட், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ICA அனுமதி பெறாதவர்கள் அபுதாபிக்கு பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICA ஒப்புதலுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என ஏற்கனவே நமது தளத்தில் படிப்படியான வழிமுறைகளுடன் விளக்கியிருந்தோம். அதுகுறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!