UAE-ல் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறார்கள்?

ஐக்கிய அரபு அமீரகம் வாழ் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் அவர்களின் இன்டர்நெட் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

குளோபல் வெப் இண்டெக்ஸ் கணக்கின் படி UAE-ல் குடியிருப்பவர்கள் சராசரியாக சுமார் 3 மணி நேரம் 11 நிமிடம் சமூக வலைதளங்களில் நேரங்களை செலவு செய்வதாக குறிப்பிடுகிறது. இது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா பிரதேசத்தை விட அதிகம். மேலும், வலைதள பயன்பாட்டில் உலகில் 6 வது இடம் பெற்றுள்ளது.

வருடா வருடம் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை கணக்கின் படி போன வருடம் 15 நிமிடம் UAE பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது உலகில் இரண்டாவது இடம். மேலும், சவூதி அரேபியாவை காட்டிலும் 2 நிமிடம் குறைவு.

2012 ஆம் ஆண்டு கணக்கின் படி UAE மக்கள் 2 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் வரை இருந்த சமூக வலைதள பயன்பட்டாளர் எண்ணிக்கை தற்போது 50 நிமிடம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.