fbpx
UAE Tamil Web

6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் அமீரகத்திற்குத் திரும்பலாம்..!

travelers airport

அமீரகத்திலிருந்து வெளியேறி 6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் மீண்டும் அமீரகத்திற்கு வரலாம் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்களின் சிரமத்தை கவனத்தில்கொண்டு அமீரகத்திற்கு வெளியே 180 நாட்களுக்கும் அதிகமாக வசிப்போர் மீண்டும் அமீரகம் திரும்ப அமீரக அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் இந்த நடைமுறை மார்ச் 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

துபாயை மையமாகக்கொண்டு செயல்படும் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய் தனது இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை ஜனவரி 4 ஆம் தேதி வெளியிட்டது. அதில்,” அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து 180 நாட்களுக்கும் மேல் அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருந்தால், மார்ச் 31, 2021 ஆம் தேதி வரை அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில்,” செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து 180 நாட்களுக்கும் மேல் துபாய்க்கு வெளியே தங்கியிருந்தால், மார்ச் 31, 2021 ஆம் தேதி வரை அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் GDRFA விடம் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும் ” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியக் குறிப்பு: அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்கள் தங்கியிருக்கும் நபர்கள் மீண்டும் அமீரகம் வர GDRFA விடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

இந்த அறிவிப்பு பல மாதங்களாக அமீரகத்திற்கு வெளியே தவிக்கும் குடியிருப்பாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பரவச் செய்திருக்கிறது.