UAE Tamil Web

இந்தியா, இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் அமீரகம் வரலாம்..!!

Stock-India-airport-Indigo

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் (ICA) நேற்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதன்படி, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாளை முதல் (ஆகஸ்டு 30) டூரிஸ்ட்/ விசிட் விசா வேண்டி விண்ணப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு இந்தியா, இலங்கை போன்ற அமீரக அரசால் முன்பு பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட நடைமுறைகளே தொடர்ந்து பின்பற்றப்படும்.

அமீரக அரசால் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பெற அவர்கள் தங்களது கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை ICA இணையதளம் அல்லது அப்ளிகேஷன் மூலமாக பதிவேற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stock-India-airport-Indigo
30 Shares
Share via
Copy link