ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன..!!

UAE roads closed as high waves cause flooding

ஷார்ஜா மற்றும் புஜைராவின் கிழக்கு பகுதியின் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கோர் ஃபக்கான் மற்றும் கல்பாவில் உள்ள Corniche சாலைகள் திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு மூடப்பட்டன. ஏனெனில், தடுப்பை மீறி, சுற்றியுள்ள தெருக்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அலை ஏற்பட்டது.

புஜைராவின் திசையில் கல்பா சாலை மூடப்பட்டது. கடல் மட்டத்திற்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்கவும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் இப்பகுதியைத் தவிர்க்கவும் ஷார்ஜா காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும், வாகனம் ஓட்டும்போது வேக வரம்பிற்குள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் காவல்துறையினர் அபாயகரமான சூழ்நிலை காரணமாக கடலில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். நீர் நிலைகள் உயர்ந்ததன் காரணத்தினால் கோர் ஃபக்கன் கார்னிச் சாலையில் சீல் வைத்தனர்.

மேலும், புஜைரா காவல்துறையினர் முர்பா கடற்கரை சாலையை மூடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

Loading...