UAE Tamil Web

அமீரக அரச குடும்ப உறுப்பினர் மறைவு.. இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி ஷேக் கலீஃபா

president

இன்று காலை காலமான அமீரக அரச குடும்ப உறுப்பினரான ஷேக்கா மரியம் பின்த் ஹம்தான் பின் சயீத் பின் கலீஃபா அல் நஹ்யான் மறைவுக்கு, அமீரகத்தின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

எல்லாம் வல்ல இறைவன் ஷேக்கா மரியமிற்கு கருணை வழங்கவும், அவரை சார்ந்த அனைவருக்கும் பொறுமை மற்றும் ஆறுதல் அளிக்க வேண்டும் என்று கூறி ஷேக் கலீஃபா ஷேக்கா மரியம் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், அல் நஹ்யான் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அல் அய்னில் இன்று காலமான ஷேக்கா மரியம் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் உறவினர் மற்றும் அமீரக துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் அத்தையும் ஆவார்.

அமீரக சமூக ஊடக பயனர்களும் ஷேக்கா மரியமின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர், மேலும் அமீரக ஆளும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இறைவன் அவரது ஆன்மாவுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பிரார்த்தனை செய்தனர்.