UAE Tamil Web

“அமைதியும் செழிப்பும் ஏற்படட்டும்” – மக்களுக்கு ஈத் அல் பித்ர் வாழ்த்து தெரிவித்த அமீரக தலைவர்கள்..!

UAE Leaders

அமீரகத்தில் இன்று ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் மற்றும் அமீரக மக்களுக்கு அமீரக ஆட்சியாளர்கள் ஈத் அல் பித்ர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமைமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,” அமீரக மக்களுக்கும் உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் வாழ்த்துக்கள். எதிர்வரும் நாட்கள் நமக்கு ஆசிர்வாதத்தையும் அமைதியையும் செழிப்பையும் தரட்டும். எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஆசிர்வதித்து நாம் மேற்கொள்ளும் நற்செயல்களை ஏற்றுக்கொள்ளுமாறு பிரார்த்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல அபுதாபியின் இளவரசரும், அமீரக ஆயுதப் படையின் துணை தலைமைத் தளபதியுமான பெருமைமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” நம் நாடு, பிராந்தியம் மற்றும் உலகத்திற்கு அமைதியையும் செழிப்பையும் வழங்கிட இப்புனித நாளில் பிரார்த்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி, ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி, அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ஹுமாயித் பின் ரஷீத் அல் நுவைமி, புஜைராவின் ஆட்சியாளர் ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி மற்றும் உம் அல் குவைனின் ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முஅல்லா ஆகியோரும் அமீரக மக்கள் மற்றும் உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

UAE Leaders
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap