UAE Tamil Web

அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவிப்பு..!

worker

ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசனை நிறுவனமான கூப்பர் ஃபிட்ச் (Cooper Fitch) நடத்திய ஆய்வில் அடுத்த ஆண்டில் அமீரகத்தில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆலோசனை, மனிதவள மேம்பாடு, உற்பத்தி, டெக்னாலாஜி, திட்டமிடல் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டு 10 சதவீதம் வரையில் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளன.

2022 ஐப் பொறுத்தவரையில் 43 சதவீத தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில்,

35 % நிறுவனங்கள் 0 முதல் 5 சதவீதமும்

4% நிறுவனங்கள் 6 முதல் 9 சதவீதமும்

5% நிறுவனங்கள் 10 மற்றும் அதற்கதிக சதவீதமும் ஊதியத்தை உயர்த்த உள்ளன.

37% நிறுவனங்கள் அடுத்தாண்டு ஊதியத்தை உயர்த்தும் திட்டமில்லை என அறிவித்துள்ளன. முக்கியமாக 19% நிறுவனங்கள் அடுத்தாண்டு தங்களது ஊழியர்களின் ஊதியத்தை 10 சதவீதம் வரையிலும் குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.

எக்ஸ்போ, கத்தாரில் நடைபெற இருக்கும் பிபா வேர்ல்ட்கப் ஆகியவை புதிய தொழில்களை பெருமளவு ஈர்த்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனஸ்

அதேபோல, 63% நிறுவனங்கள் கடந்தாண்டில் போனஸ் கொடுத்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 44% ஆக இருந்தது.

அடுத்தாண்டில், 74 சதவீத நிறுவனங்கள் போனஸ் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன. இவற்றில்,

46 சதவீத நிறுவனங்கள் 1-2 மாத ஊதியத்தையும் 21 சதவீத நிறுவனங்கள் 3-5 மாத ஊதியத்தையும் போனசாக வழங்க இருக்கிறது. மேலும், 26 சதவீத நிறுவனங்கள் அடுத்தவருடத்தில் போனஸ் கொடுக்கும் திட்டமில்லை எனத் தெரிவித்துள்ளன.

worker
11 Shares
Share via
Copy link