அமீரகத்தில் 2G நெட்வொர்க் சேவையை திட்டத்தின்படி நிறுத்தப்போவதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA)) அறிவித்துள்ளது.
2022 ஜூன் மாதத்தில் அமீரகம் முழுவதும் 2G மொபைல் போன் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகவும், இந்தாண்டு இறுதியில் 2ஜி நெட்வொர்க் சேவையை நிறுத்தப்போவதாகவும் TDRA தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் 2G நெட்வொர்க் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. பல ஆண்டுகளாக நாட்டில் மொபைல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரபு நாடுகளிலேயே அமீரகம் தான் 5G நெட்வொர்க்கை முதலில் அறிமுகப்படுத்த உள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே 4வது நாடாக 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திவதில் அமீரகம் சிறந்து விளங்குகிறது.
2G நெட்வொர்க் குறைவான செயல்திறன் கொண்டதால், அதிநவீன 5G நெட்வொர்க்கை அமீரகம் அறிமுகப்படுத்துகிறது. இண்டெர்நெட்டின் வேகத்திற்கு ஏற்ப 3G, 4G அல்லது 5G நெட்வொர்க் இயங்கும். இதனால் பயனர்கள் அதிவேகமான இண்டெர்நெட்டை பெற முடியும்.
இந்நிலையில் 2G இண்டெர்நெட் சேவையையும், 2G மொபைல் ஃபோனும் நிறுத்தப்படவுள்ளதால் எதிசலாட் இணையதளத்தில் எதுவெல்லாம் 2G மொபைல் ஃபோன்கள் என்று பட்டியலிட்டுள்ளது:-
NOKIA-105
NOKIA-150
NOKIA-130
NOKIA-230
NOKIA-106
NOKIA-216
NOKIA-108
SAMSUNG-GURU
NOKIA-3310 2G
NOKIA-105/1050
NOKIA-215
AXIOM-B104 JOY 3
NOKIA-1280/1282
NOKIA-107
NOKIA-225
NOKIA-Nokia 106 DS
NOKIA-ASHA 210, NOKIA 210
NOKIA-X1
NOKIA-Nokia 216 DS
NOKIA-101/1010
இந்த மொபைல் ஃபோன் மாடல்களில் ஏதேனும் உபயோகித்துகொண்டு இருந்தால் 3G, 4G, 5G நெட்வொர்க் மொபைலுக்கு மாற்றம் செய்யுமாறும், இத்தகைய மாடல்களில் உள்ள மொபைலை வாங்க வேண்டாம் என்றும் எதிசலாட் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.