UAE Tamil Web

டிரைவர் மட்டுமல்ல ; காரில் உள்ள அனைவருமே சீட் பெல்ட் போடவேண்டும் – இல்லையென்றால் அமீரகத்தில் அபராதம் எவ்வளவு தெரியுமா..?

special car stickers

டிரைவர் மட்டுமல்லாமல் காரில் உள்ள அனைவருமே சீட் பெல்ட் அணியவேண்டும் என அபுதாபி காவல்துறை பொதுமக்களை மீண்டும் மீண்டும் எச்சரித்துவருகிறது. காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை எனில் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதோடு, வாகனவோட்டியின் ஓட்டுனர் உரிமத்தில் 4 கரும்புள்ளிகளும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களைக் கண்காணிக்க தானியங்கி அமைப்பு ஒன்று செயல்பட்டு வருவதாக அபுதாபி காவல்துறை முன்னரே தெரிவித்திருந்தது.

அதாவது சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ரேடாரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகனம் ஓட்டுகையில் போன் பேசுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியதவர்களின் துல்லிய புகைப்படங்கள் பதிவு செய்யப்படும்.

உயிர்காக்கும் சீட் பெல்ட்

சீட் பெல்ட் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் காரின் முகப்புப் பகுதியில் அமர்ந்திருக்கும் நபர்கள் சீட் பெல்ட் அணிவதால் விபத்துகளில் இருந்து உயிர்பிழைக்க 40 முதல் 50 சதவீத வாய்ப்பு அதிகம் எனவும் இதுவே பின்புறத்தில் அமர்பவர்களுக்கு 25 முதல் 75 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது. ஆகவே இனி காரில் செல்லும்போது மறக்காமல் சீட்பெல்ட் அணியுங்கள்.

special car stickers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap