UAE Tamil Web

கடந்த ஆண்டு மட்டும் 168,300 கள்ளப் பொருட்களைக் கைப்பற்றிய அமீரக சுங்கத்துறை..

fake

அமீரக சுங்கத்துறை கடந்த ஆண்டில் போலி பைகள், தொலைபேசிகள் மற்றும் நகைகள் உட்பட சுமார் 168,000 கள்ளப் பொருட்களை கைப்பற்றியுள்ளது.

- Advertisment -

அமீரகத்தில் உள்ள ஃபெடரல் சுங்க ஆணையம் மற்றும் உள்ளூர் சுங்கத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய 67 ரெய்டுகளில், கள்ள ஐபோன் பெட்டிகள், போலி பிராண்டட் ஆடைகள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் காலணிகள் உட்பட 168,251 போலி பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2018-ம் ஆண்டை ஒப்பிடும் போது(169,587) சென்ற ஆண்டு அமீரகத்தில் கைப்பற்றப்பட்டுள்ள போலி போர்டுகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. திருட்டுத்தனத்தை தடுக்க அமீரகம் தனது பங்கைச் செய்ய உறுதிபூண்டுள்ளதாக சுங்க ஆணையர் அலி அல்னேடி தெரிவித்துள்ளார். மேலும் அமீரகத்திலுள்ள சுங்க நிறுவனங்கள் மிக முக்கியமான நிறுவனங்கள், அவை உலக வர்த்தகத்தில் அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாக்க கவனம் கொண்டுள்ளன என்றார்.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பிற்கு அமீரகம் மிகவும் முன்னுரிமை அளிக்கிறது. உள்ளூர் சுங்க அலுவலகங்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிக்கவும், இடைமறிக்கவும் பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றின. கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கிட்டத்தட்ட 30% போலி கைப் பைகள், அதைத் தொடர்ந்து 12% தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் அடங்கும்.

கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களிலும் 7.5% போலி உடைகளும், வாசனை திரவியங்கள் மற்றும் காலணிகள் ஒவ்வொன்றும் 5% ஆகும். மேலும் சிறியளவில் பறிமுதல் செய்யப்பட்ட பிற பொருட்களில் கண்ணாடி மற்றும் நகைகளும் அடங்கும் என்றார்.