UAE Tamil Web

பிலிப்பைன்சுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீரகம் – 1 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு!பிலிப்பைன்சுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீரகம் – 1 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு!

உதவி என்று வந்துவிட்டால் அமீரகத்தோடு போட்டிப்போடுவதற்கு ஆள் இருக்காது. கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் கடும் சோதனைக்கு ஆளாகி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் டெல்டா வகை கொரோனா தொற்றை எதிர்த்து களமாடி வருகிறது. பிலிப்பைன்சுக்கு உதவும் விதமாக அமீரகத்தில் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள், ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

UAE sends medical aid to the Philippines in fight against COVID-19 | Government – Gulf News
(File)

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தங்களால் முடிந்த உதவிகளை உலக நாடுகளுக்கு செய்யத் தயார் என்றும் அமீரகம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் பரந்த மனப்பான்மையை போற்றிய பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை, உதவிகளை பெற்றுக்கொண்டபின் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்சில் புயல் தாக்கியபோதும் 9.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அமீரகம் அனுப்பி வைத்தது. இது தவிர கொரோனா பேரிடர் காலங்களில் இதுவரை 2,250 டன் மருத்துவ உபகரணங்களை 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைத்து அமீரகம் நட்பு பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது

0 Shares
Share via
Copy link