UAE Tamil Web

பற்றியெரியும் கிரீஸ் – உடனடியாக உதவிகளை வழங்க அமீரக அரசு உத்தரவு!

கிரீஸில் வழக்கத்தை விட இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. காலநிலை மாற்றத்தால் அந்நாட்டின் 2வது பெரிய தீவு நகரமான எவியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

Fires Continue to Ravage Greece Amid Europe's Protracted Heat Wave - The New York Times

வேகமாக பரவும் காட்டுத்தீயால் எவியா தீவு, புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீயணைக்கும் பணியில் குரோஷியா, ருமேனியா, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் அமீரகமும் இணைந்துள்ளது. அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுப்படி கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Reparation Law – News » Open Letter to H.H Sheikh Khalifa bin Zayed Al  Nahyan, The President of UAE & Ruler of Abu Dhabi, to Claim Damages For  Non-Enforcement of a Set

நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அந்த ஹெலிகாப்டர் மூலம் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். அத்துடன் தீயை அணைக்கத் தேவையான கூடுதல் உபகரணங்கள், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருட்களையும் அமீரக அரசு கிரீஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

1 Share
Share via
Copy link