UAE Tamil Web

எகிப்து மக்களுக்காக விமானத்தில் சிறப்பு பரிசை அனுப்பிய அமீரகம்.!! மறக்க முடியாத நாள் என்று நெகிழ்ந்த எகிப்து அமைச்சர்..

egypt

அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட சீனாவின் சினோஃபார்ம் கோவிட் -19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், எகிப்து நாட்டிற்கு அதிக அளவிலான தடுப்பூசியை பரிசாக அனுப்பி வைத்துள்ளது அமீரகம்.

- Advertisment -

அமீரகம் அனுப்பிய தொற்று எதிர்ப்பு பரிசை கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் எகிப்திய சுகாதார அமைச்சர் ஹலா சயீத் தலைமையிலான குழு பெற்று கொண்டது. முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்று கொண்ட அமைச்சர் ஹலா சயீத், 100% இலவசமாக முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்ற நாள், எகிப்துக்கு மறக்க முடியாத ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், மருத்துவமனைகளில் உள்ள நாட்டின் முன்னணி மருத்துவ பணியில் இருப்பவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்படும். மேலும் சிறுநீரக செயலிழப்பு, கட்டிகள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார்.

எகிப்துக்கான எமிராட்டி தூதர் மரியம் அல்-காபி மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அமீரகம் மற்றும் எகிப்து இடையேயான உறவு சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை உணர்த்துகிறது. எங்கள் மக்களுக்கு அமீரகம் ஆதரவையும், பரிசையும் வழங்கியுள்ளது என்றார்.

100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட எகிப்து, தடுப்பூசிகளின் பெரிய சந்தையாகும். ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளை எகிப்து உறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் சமீபத்திய வாரங்களில் தினசரி நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதால் தொற்றுநோயின் இரண்டாவது அலை குறித்து எச்சரிக்கை அந்நாட்டில் விடுக்கப்பட்டுள்ளது.