34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவிய அமீரகம்..!

medical

ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகளை அதிகரிப்பதற்காக ஏழு மெட்ரிக் டன் (7000 kg) மருத்துவ பொருட்கள் அடங்கிய உதவி விமானத்தை (aid plane) இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக அமீரக செய்தி நிறுவனம் சனிக்கிழமை (நேற்று) தெரிவித்தது.

இதன் மூலம் வைரஸை எதிர்த்துப் போராடும் 7,000 மருத்துவ நிபுணர்களுக்கு இது உதவிகரமாய் இருக்கும்.

இச்செயல் குறித்து இந்தியாவின் ஐக்கிய அரபு அமீரக தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகளுக்கு ஆதரவை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் உறுதியோடு உள்ளது. மேலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான பல வருட சகோதரத்துவ நல்லுறவின் காரணமாக இந்த உதவி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவது உலகளாவிய முதன்மை கவலையாக மாறியுள்ளது. மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்துவது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்ற நம்பிக்கையில் நாங்கள் செயல்படுகிறோம்” என்று அவர் கூறினார்.

இன்றுவரை, ஐக்கிய அரபு அமீரகம் 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 348 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது, இந்த செயல்பாட்டின் மூலம் கொரோனாவை எதிர்த்து போராடும் கிட்டத்தட்ட 348,000 மருத்துவ நிபுணர்களுக்கு அமீரகம் உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

இதையும் படிங்க.!