UAE Tamil Web

“யாரும் பசியோடு இருக்கக்கூடாது.. இப்பவே சாப்பாடு அனுப்புங்க” – கட்டளையிட்ட அபுதாபி இளவரசர் – உணவுப் பொருட்களுடன் ஆப்கானிஸ்தான் பறந்த அமீரக விமானம்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு பதற்ற சூழ்நிலையே நிலவிவருகிறது. லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் தங்களது தாய்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துவருகின்றனர். இதற்கு முன்பே ஆப்கனில் இருக்கும் தங்களது நாட்டு மக்களை பல்வேறு நாடுகள் மீட்டுள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் அடிப்படை சுகாதாரம், உணவு, மருந்துப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனையடுத்து ஆப்கன் வாழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அபுதாபியின் ஆட்சியாளரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விமானம் மூலமாக, உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆப்கானுக்கு உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

அமீரக ஜனாதிபதியின் ஆலோசகரான டாக்டர்.அன்வர் கார்கேஷ் இதுகுறித்துப் பேசுகையில்,”என்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொள்கிறேன். ஆப்கானிதானில் இருந்து மக்களை வெளியேற்ற அமீரக அரசு தீவிர முனைப்பு காட்டிவருகிறது. ஆப்கனைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக மற்றும் உடல் நலத்தினை பாதுகாக்க அபுதாபி இளவரசர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட தேவையான அனைத்து முயற்சிகளையும் அமீரகம் எடுக்கும்” என்றார்.

ஆப்கான்ஸ்தானில் இருந்து அமீரகம் வந்தடைந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள், தங்குமிடம், உணவு ஆகியவற்றை அமீரக அரசு அளித்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sheikh Mohamed bin Zayed Al Nahyan
2 Shares
Share via
Copy link