UAE Tamil Web

“இதுக்குத்தான் அங்க போகாதீங்கன்னு சொல்றோம்” – தொடர்ந்து எச்சரிக்கும் அமீரக காவல்துறை.!

shrjah police

கோர் ஃபக்கான் மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு ஆசியாவைச் சேர்ந்த நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை மீட்டதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு இதுகுறித்து ஷார்ஜா கிழக்குப் பகுதி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதீத வெப்பம் காரணமாக மயங்கியவர்களை மீட்க உடனடியாக ரோந்துப் போலீசார், தேசிய ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன.

துரிதமாக மீட்கப்பட்ட ஒருவர் கோர் ஃபக்கான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். மலைப்பகுதிகளுக்கு பயணம் செல்வோர் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பயணிக்கவேண்டும் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by شرطة الشارقة (@shjpolice)

மலையின் மிக உயரமான பகுதிகளுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், நீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மலையேறிகள் எடுத்துச்செல்லவேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. முக்கியமாக செல்லும் இடத்தில் தகவல் தொடர்பு தடையில்லாமல் நடைபெறுகிறதா என்பதை அவ்வப்போது சோதித்துப் பார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

shrjah police
5 Shares
Share via
Copy link